உறக்கம்
தொலைந்த இரவுகளின்
சோகச்சுமைகளாய்
துவண்டு போயிருந்த வானம்!
கவிந்த இருளில்
விட்டில் பூச்சிகளின்
வழி தெரியாப் போராட்டம் !
இதமான தென்றலின்
இனிய வருடலில்
இலைகளின் மெல்லிய
சல சலப்பு
நிசப்தத்தின் எதிரொலி
இது,
மயான பூமி
துஷ்டர்களை சுமந்ததால்
மட்டுமல்ல
துயரங்களின் விடிவெள்ளியாய்
இருந்ததாலும் கூடத்தான்!
வெண்புறா முகத்தில்
குருதி தெளித்து
உறக்கம் கலைத்த
கல்லறைப் பூமியின்
இருண்ட பொழுதுகள்
விடியலை தேடிய
பூபாளங்களும் திசை
மாறிய பறவைகளாய்
துயரும் கண்ணீரும்
நித்தியமென்றல்
விடிய இரவுகள்
எமக்கினி துயர் துடைக்கட்டும்!
தொலைந்த இரவுகளின்
சோகச்சுமைகளாய்
துவண்டு போயிருந்த வானம்!
கவிந்த இருளில்
விட்டில் பூச்சிகளின்
வழி தெரியாப் போராட்டம் !
இதமான தென்றலின்
இனிய வருடலில்
இலைகளின் மெல்லிய
சல சலப்பு
நிசப்தத்தின் எதிரொலி
இது,
மயான பூமி
துஷ்டர்களை சுமந்ததால்
மட்டுமல்ல
துயரங்களின் விடிவெள்ளியாய்
இருந்ததாலும் கூடத்தான்!
வெண்புறா முகத்தில்
குருதி தெளித்து
உறக்கம் கலைத்த
கல்லறைப் பூமியின்
இருண்ட பொழுதுகள்
விடியலை தேடிய
பூபாளங்களும் திசை
மாறிய பறவைகளாய்
துயரும் கண்ணீரும்
நித்தியமென்றல்
விடிய இரவுகள்
எமக்கினி துயர் துடைக்கட்டும்!
fantastic
ReplyDelete