தொலை வானில்
பட்சியொன்று
சிறகடித்ததை
கண்ணுற்ற
உன் விழிகள்
இணையானது
துணையானது!
சஞ்சரிக்கிறேன் நான்
உன் சிறகுகளுடன்
நீண்ட நெடு வானில்.....!
வாழ்வின் வலிகள்
மறந்து போக
வருகிறாயா எங்காவது
தோப்போரம் இளைப்பாறலாம்
வாழ்வு முழுக்க .......!!!
கருவில் உருவாகிய வேட்கை, கனவுச் சுமையாய் இதயமதில் உறைந்த தவிப்பு ! எந்தையின் நினைவில் நின்றிருந்த நினைவு, பிரசவிக்கின்றது வைகறை பூபாளங்களை நீண்டகால வலியின் பின் ..........!
No comments:
Post a Comment