Friday, 26 June 2009




மறந்து போகாதோ...மறைந்து போகாதோ...!

அலறலிலும்
ஓசை
கேட்கக் கூடாதென்ற
அச்சம் !...

அறிய பிறவியான மானுடம்
சல்லிக் காசு பெருமதியற்றதாய்
முடியுமென்ற இருண்டகாலம்
என்னும் தொடராய்!
போதும்....! போதும்....!
வாழ்வின் நிம்மதியை
உறவுகளின் உயிரை
பெண்களின் கற்பை
பறிக்கும் இந்நாட்கள்
மறைந்து போகாதோ.......?
மறந்து போகாதோ ........?
எம் வாழ்வைவிட்டு ......!

No comments:

Post a Comment