
தூரத்து உறவுகளாகி விட்ட
எம் நினைவுப் புஷ்பங்கள்
மலரும் போதெல்லாம்
சுகந்தம் வீசும் இதயமெங்கும்!
துயரங்களை
நெஞ்சுள் புதைத்து
சுதந்திர வானில்
வட்டமிட்டு திரிந்த
வானம் பாடிகள் !
இயற்கை அன்னையின்
இனிய சிருஷ்டியில்
கொள்ளை கொள்ளும்
மலைச்சாரல்கள் !
எட்டுத்திசைப் பறவைகளின்
வேடந்தாங்கலாய்
கல கலக்கும் விடுதிகள்
ஆனந்தமாய் !
சில்லறை சண்டைகள்
சிநேகமான உறவுகள்
துரோகக் கும்பல்கள்
நட்பின் ஆழங்கள்
எத்தனை முகங்களின்
அறிமுக தலம் !
பிரிவின் வலி ரணமாய் சுட
கண்ணீர் துளிகளால்
புனிதப்படும் நட்பு மட்டுமல்ல
காதலும் கூடத்தான் !
உணர்வுகள் சோர்ந்தாலும்
மலர்த்த முகத்துடன்
கால்கள் நடை போடும்
எம் இலட்சியப் பயணம் நோக்கி!
எம் நினைவுப் புஷ்பங்கள்
மலரும் போதெல்லாம்
சுகந்தம் வீசும் இதயமெங்கும்!
துயரங்களை
நெஞ்சுள் புதைத்து
சுதந்திர வானில்
வட்டமிட்டு திரிந்த
வானம் பாடிகள் !
இயற்கை அன்னையின்
இனிய சிருஷ்டியில்
கொள்ளை கொள்ளும்
மலைச்சாரல்கள் !
எட்டுத்திசைப் பறவைகளின்
வேடந்தாங்கலாய்
கல கலக்கும் விடுதிகள்
ஆனந்தமாய் !
சில்லறை சண்டைகள்
சிநேகமான உறவுகள்
துரோகக் கும்பல்கள்
நட்பின் ஆழங்கள்
எத்தனை முகங்களின்
அறிமுக தலம் !
பிரிவின் வலி ரணமாய் சுட
கண்ணீர் துளிகளால்
புனிதப்படும் நட்பு மட்டுமல்ல
காதலும் கூடத்தான் !
உணர்வுகள் சோர்ந்தாலும்
மலர்த்த முகத்துடன்
கால்கள் நடை போடும்
எம் இலட்சியப் பயணம் நோக்கி!
No comments:
Post a Comment